பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 8 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு

பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.;

Update: 2023-12-19 15:37 GMT

பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

2024 மார்ச் 31-க்குள் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 95 லட்சம் வீடுகள் கட்டும் மத்திய அரசு திட்டத்தின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 கோடியே 94 லட்சம் வீடுகளுக்கான ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளித்த அமைச்சர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளில் 13.12.2023 வரை 2 கோடியே 51 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின்படி மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 7,79,851 ஆகும். இவற்றில் 2021 – 2022-ல் 2,21,945 வீடுகளும், 2022 – 2023-ல் 37,427 வீடுகளும் பயனாளிகளுக்கு மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மாவட்டம் வாரியாக மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ள வீடுகள் ஒதுக்கீட்டு எண்ணிக்கை விவரத்தையும் அவர் தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:

அரியலூர்-23,295

செங்கல்பட்டு- 12,750

கோயம்புத்தூர்-2,813

கடலூர்- 55,149

தர்மபுரி- 23,318

திண்டுக்கல்- 6,928

ஈரோடு- 7,460

கள்ளக்குறிச்சி- 11,669

காஞ்சிபுரம்- 31,575

கன்னியாகுமரி- 2,366

கரூர்- 5,520

கிருஷ்ணகிரி- 19,029

மதுரை-7,953

மயிலாடுதுறை-11,417

நாகப்பட்டினம்- 53,308

நாமக்கல்- 8,556

பெரம்பலூர்- 13,920

புதுக்கோட்டை- 30,719

ராமநாதபுரம்- 18,906

ராணிபேட்- 4,124

சேலம்- 27,562

சிவகங்கை- 11,136

தென்காசி- 5,709

தஞ்சாவூர்- 40,831

நீலகிரி- 2,737

தேனி- 1,865

தூத்துக்குடி- 5,483

திருச்சிராப்பள்ளி- 22,127

திருநெல்வேலி-16,597

திருப்பத்தூர்-6,819

திருப்பூர்- 4,206

திருவள்ளூர்- 20,790

திருவண்ணாமலை- 49,496

திருவாரூர்- 54,490

வேலூர்- 35,008

விழுப்புரம்- 1,08,417

விருதுநகர்- 7,752

மத்திய அமைச்சரின் இத்தகைய தகவல்களை மக்களிடம், குறிப்பாக கிராமப் பகுதி மக்களிடம் கொண்டு சென்று மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் நடத்தப்படும் இத்தகைய யாத்திரைகள் மக்கள் வீட்டுவசதி பெறுவதற்கு ஏதுவாக அமையும்.

Tags:    

Similar News