மீண்டும் மிரட்டத் தொடங்கிய ஜிகா வைரஸ்
உத்தரப் பிரதேசத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள விமானப் படை அலுவலருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்;
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் விமானப்படை தளத்தில் பணியாற்றும் விமானப் படை அலுவலர் ஒருவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்தது. இதையடுத்து விமானப் படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த அவருக்கு இரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது.
பரிசோதனை முடிவில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்க டெல்லியிலிருந்து நிபுணர் குழுவும் கான்பூர் சென்றுள்ளனர்.