அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு ரத்து தொடர்பான எடப்பாடியின் மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.;

Update: 2022-08-23 03:44 GMT

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கப்பட்டது .

பொதுக்குழு செல்லாது என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகிய ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தனித்தனியாக மனுக்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுக்களை பட்டியலிடும்படி கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க ஒப்புதல் அளித்தனர். இதைத்தொடர்ந்து 3 மனுக்களையும் இன்று பட்டியலிடும்படி பதிவு துறைக்கு உத்தரவிட்டனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

Tags:    

Similar News