மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் அஇஅதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.;

Update: 2022-05-30 16:47 GMT

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிடும் அஇஅதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் இன்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது கூட்டணி கட்சியான திமுக சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்ரமணியன், சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக ப சிதம்பரம், திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு மு க ஸ்டாலினை சென்னையில் மாரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதைத் தொடர்ந்து அஇஅதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம், திரு ஆர் தர்மர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அப்போது அஇஅதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். வேட்பாளர்கள் தங்களது மனுக்களை சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர்.

Tags:    

Similar News