அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று சீல் அகற்றம்

ADMK News Tamil- அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் இன்று கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் அகற்றப்படுகிறது.

Update: 2022-07-21 04:23 GMT

ADMK News Tamil- ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இரண்டு தரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 2 காவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் ஜூலை 14 மற்றும் 15ஆம் தேதிகளில் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது .

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , அதிமுக அலுவலக சீலை அகற்றி எடப்பாடி பழனிசாமிடம் தலைமை அலுவலக சாவியை வழங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ஒரு மாத காலத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அலுவலகத்திற்குள் வர அனுமதிக்க கூடாது என்றும் காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் சீல்வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று திறக்கப்படுகிறது. மயிலாப்பூர் கோட்டாட்சியர் சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அலுவலக மேலாளரிடம் ஒப்படைக்கிறார்.

அதிமுக அலுவலகம் திறக்கப்பட்டாலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தொண்டர்கள் ஒரு மாத காலத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News