அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!..!
Supreme Court News - அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த எவ்வித தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தடாலடியாக கூறி அனுமதி அளித்துள்ளது.;
புதுடெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம்
Supreme Court News -நடிகராக வாழ்க்கையை ஆரம்பித்து தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல்வாதிகாக பரிணமித்த எம்.ஜி.ஆர் துவங்கி ஜெயலலிதா கட்டுக்கோப்பாக வளர்த்த அ.தி.மு.க பதவி சண்டையாலும், கோஷ்டி மோதலாலும் சிக்கி தவித்து வருகிறது. அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவுக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்; இந்த மனு மீது விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பிலும் வாதிடப்பட்டது. இதனையடுத்து கடந்த 23ஆம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காலாவதியாகிவிட்டது என்றும், உயர்நீதிமன்றம் அதிகாரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது என்றும் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் தனி நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் என இரு தரப்புக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் பொதுக்குழுவில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடியது ஏன் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு நாங்கள் எப்படி தடை விதிக்க முடியும். பொதுக்குழு சட்டப்படி நடைபெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2