நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி

ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2023-06-10 04:46 GMT

ஆந்திர மந்திரியும் முன்னாள் நடிகையுமான ரோஜா 

பிரபல நடிகையும், அமைச்சருமான ரோஜா இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். திரைத்துறையில் மாபெரும் வெற்றியை பெற்ற ரோஜா அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியல் ஈடுபட்டு வரும், ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். தற்போது சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரோஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கால் வீக்கம் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் 90களில் அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. அந்த படம் ஹிட் அடிக்கவே தமிழில் மிகப்பெரிய நடிகையாக உயர்ந்தார். தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்தார். தமிழில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோஜா, தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

ஆர்கே செல்வமணியை காதலித்து வந்த ரோஜா அவரை 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

சினிமாவை தொடர்ந்து ஆந்திராவில் அரசியலிலும் களம் இறங்கினார். ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரோஜா, நகரி தொகுதியில் 2014ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது ஆந்திராவின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக உள்ளார்.

Tags:    

Similar News