Actor Vijay- விஜய் படத்தை கூடுதல் காட்சிகள் திரையிட்டால் நடவடிக்கை; திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை

Actor Vijay- விஜய் நடித்த லியோ படத்தை, தியேட்டர்களில் கூடுதல் காட்சி திரையிட்டால், புகார் தெரிவிக்கலாம் என, திருப்பூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.;

Update: 2023-10-15 09:27 GMT

Actor Vijay- நடிகர் விஜய் நடித்த லியோ படம், வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Actor Vijay, Leo, Extra Show, Collector Alert- திருப்பூா் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளை அதிகாலை 1.30-மணி முதல் காலை 9 -க்குள் திரையிட்டால் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.


இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் லியோ திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி அக்டோபா் 19 -ம் தேதி முதல் அக்டோபா் 24 -ம் தேதி வரையில் திரையிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் லியோ திரைப்படம் அக்டோபா் 19 -ம் தேதி முதல் அக்டோபா் 24- ம் தேதி வரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடப்பட வேண்டும்.


அரசால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கக்கூடாது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள் மேற்கண்ட விதிமுறைகளை மீறினால் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களில் புகாா் அளிக்கலாம்.

திருப்பூா் சாா் ஆட்சியா் அலுவலகம்: 0421-2200151, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம்: 04258-220216, உடுமலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம்: 0425-2230630, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்: 0421-2971140.


விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

பொதுவாக பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும்போது, ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்தான். ஆனால், லியோ படத்துக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதுவும் ரசிகர் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என முதலில் தமிழக அரசு முதலில் மறுப்பு தெரிவித்த நிலையில், ரசிகர்களும் தியேட்டர் நிர்வாகங்களும், விநியோகஸ்தர்களும் பலத்த ஏமாற்றமடைந்தனர். அதற்கு பிறகு, ரசிகர் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே வேளையில், கூடுதல் காட்சிகள் திரையிட்டால் நடவடிக்கை என, கலெக்டர் எச்சரிக்கை செய்திருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


அதே வேளையில், விஜய் ரசிகர்களின் அழுத்தம் காரணமாக, சென்னை கோயம்பேடு  ரோகிணி தியேட்டரில் விதிமுறை மீறி லியோ டிரெய்லர் திரையிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள், தியேட்டரை சூறையாடி சேதப்படுத்தி, அது வைரலாகி விட்டது. இந்த சூழலில், இத்தகைய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.

Tags:    

Similar News