செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பாடிய சிவகார்த்திகேயன் மகள்

நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது சமூக வலைதளங்களில் வைரலானது

Update: 2022-08-10 05:20 GMT

ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழாவில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பூப்பந்தாட்டம், கண்ணாமூச்சி, சதுரங்கம் என பல விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர். குறிப்பாக, 'செம்மொழியான தமிழ் மொழியாம்' பாடல் இந்த நான்கு கருவிகளில் இசைக்கப்பட்டது


இதன்பின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை சிறுமிகளுடன் இணைந்து பெண்களும் பாடினார். இந்த குழுவில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதானாவும் பங்கேற்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடினார்

நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆராதனா கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News