நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் தனிமை

மக்கள் நீதிமய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.;

Update: 2021-11-22 09:50 GMT

கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தற்போது தனியார் தொலைக்காட்சியில் வெளிவரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News