துப்பாக்கி சுடுதலில் அசத்திய நடிகர் அஜித்

Actor Ajith - 47-வது மாநில அளவில் அனைத்து துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அணி நான்கு தங்கம் வென்று அசத்தல்;

Update: 2022-07-30 04:57 GMT

நடிகர் அஜித் குமார்

Actor Ajith - திருச்சி மாநகர கே.கே. நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் 47வது மாநில த்துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி துப்பாக்கி சுடும் போட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

திருச்சி மாநகர ரைபிள் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்களும் மாணவர்களும் உள்ளனர். இங்கு 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 10 மீட்டர் தூரத்தில் மூன்று சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது.

இதில் தமிழக முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1300 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார்.

10 மீட்டர், 25மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நடிகர் அஜித் கலந்து கொண்டார். இந்நிலையில் 47-வது மாநில அளவில் அனைத்து துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அணி நான்கு தங்கம், இரண்டு வெண்கலம் வென்றுள்ளது.


ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர், 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் மாஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளில் அஜித்தின் அணி அசத்தல் வெற்றி அடைந்துள்ளது.

இதில் வெற்றி பெற்றவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என திருச்சி காவல்துறை தெரிவித்துள்ளது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News