'அண்ணாமலை மீது 24 மணிநேரத்தில் நடவடிக்கை'- அமைச்சர் செந்தில் பாலாஜி
'அண்ணாமலை மீது 24 மணிநேரத்தில் நடவடிக்கை'-எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.;
அமைச்சர் செந்தில் பாலாஜி.
தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு வரும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். இதற்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதில் அளித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் என குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டிற்கு ஆதாரத்தை அவர் 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு கவுன்சிலராக கூட பொறுப்பு வகிக்காமல் இருந்தவருக்கு மாநில அளவில் பதவி கொடுத்தால் இப்படித்தான் பேசுவார்கள் என்பதை அவரது பேட்டி சுட்டிக் காட்டுகிறது. அவருக்கு தமிழக அரசின் திட்டங்கள் பற்றிய புரிதல் இல்லை தனக்கு ஒரு விஷயம் பற்றி தெரியவில்லை என்றால் யாரிடமாவது கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் மேலும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.