12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: 93.76% மாணவர்கள் தேர்ச்சி
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டு நிறைவடைந்து விட்ட நிலையில் இன்று 10, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தாமதமாக 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
அதன்படி 12ம் வகுப்பு - 93.76% மாணவர்கள் தேர்ச்சி என்றும் 10ம் வகுப்பு 94.07% மாணவர்கள் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் இணையதளத்தில் காலை 10 மணி முதல் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.