தமிழகத்தில் நாளை 8-வது கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் நாளை 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

Update: 2021-11-05 01:25 GMT

மாதிரி படம்

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி தொடங்கிய கொரோனா தடுப்பூசி போடும் பணி,  தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி 'டோஸ்' தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அதிக பேருக்கு தடுப்பூசி போட வசதியாக மாவட்டங்களில் பல இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 7 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 1 கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 382 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வரும் 6-ந் தேதி (சனிக்கிழமை  8-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சுமார் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. 2-வது தவணை 'கோவேக்சின்' தடுப்பூசி 13 லட்சம் பேருக்கும், 'கோவிஷீல்டு' தடுப்பூசி 48 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட உள்ளது.

தொடர்ந்து 8 வாரமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றாலும், இன்னும் தடுப்பூசி போட வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதன் அடிப்படையில்தான் வீடுகளுக்கே தேடி சென்று தடுப்பூசி போடப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News