டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்:டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
தமிழகத்தில் 76 காவல்துறை டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது காவல்துறையில் 76 டிஎஸ்பிகளை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அதில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கு தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு , பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று டி.எஸ்பிக்களான கண்ணன் , சம்பத், சுரேஷ் ஆகியோர் ராமநாதபுரம் சரகர் காவலர் பயிற்சி மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக ரித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மொத்தமாக தமிழக காவல்துறையில் 76 டி.எஸ்பிக்களை அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளர். இந்த பணியிடமாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பிகளில் பெரும்பாலானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள்