700 ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை

அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது;

Update: 2021-11-25 06:49 GMT

நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது அண்ணா பிறந்தநாளையொட்டி, நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கான அரசாணையை உள்துறைச் செயலாளர் பிரபாகர் இன்று வெளியிட்டுள்ளார். அரசாணையில், வன்கொடுமை, பயங்கரவாதம், மதம், சாதி மோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News