அண்ணா பிறந்தநாள் -700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் கைதிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்;

Update: 2021-09-13 11:07 GMT

சட்டப்பேரவையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.

அப்போது காவலர்கள், ஓய்வுபெற்ற காவலர்களுக்கு நலவாரியம் , உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு, காவலர் மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

மேலும், சென்னை பெருநகர காவல்துறையை போல், தாம்பரம், ஆவடி ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும், தமிழ்நாட்டில் கூடுதலாக நான்கு தீயணைப்பு, மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து தற்போது செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி700 ஆயுள் கைதிகள் முன்னரே விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

Tags:    

Similar News