இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ 5.08 கோடி செலவில் 69 புதிய வாகனங்கள்

இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ 5.08 கோடி செலவில் 69 புதிய வாகனங்கள் - தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2022-04-05 02:34 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்கு 5 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவிலான 69 புதிய வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக, 2 அலுவலர்களுக்கு நேற்று வாகனங்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு . 5 திருக்கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம், 100க்கும் மேற்ப்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு , பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோயில்களின் நந்தவனங்களை சீரமைத்தல், 1000 மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் நடத்த அனுமதி, ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு புதிய பள்ளி, கல்லூரிகள் தொடங்குதல், போன்ற பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

2021-22ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், அலுவலர்களுக்கு 108 வாகனங்களை 8 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, முதற்கட்டமாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், மக்கள் தொடர்பு அலுவலர், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் பொறியாளர்கள் ஆகியோர்களுக்கு 5 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 69 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் இரா. கண்ண ன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News