தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம். மின்தடை ஏற்படுமா?

Update: 2022-04-21 06:59 GMT

கோப்பு படம் 

நிலக்கரி தட்டுப்பாட்டால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மின் வெட்டு பிரச்சனை நிலவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 100ல் மிகவும் குறைவான அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் விதம், 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலமாக நிலக்கரி கொண்டுவரப்பட்டு 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1, 3, 5 ஆகிய யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 3 யூனிட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனல் மின் நிலையத்தில் உள்ள 2 யூனிட்டுகள் மூலம் 420 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News