ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி: 50 ஜிபி இலவச டேட்டா என்ற தகவல் உண்மையா?

ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை காண்பதற்காக 50 ஜிபி இணையதள சேவை இலவசமாக வழங்கப்படுவதாக பொய்யான செய்தி உலா வருகிறது.;

Update: 2022-11-23 02:54 GMT

வாட்ஸ்அப்பில் பரவும் பொய்யான செய்தி 

ஃபிஃபா உலக கோப்பை 2022 கால்பந்து போட்டி கடந்த 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்கியது. இது டிசம்பர் 18ஆம் தேதி முடிகிறது. இந்த போட்டியில் 5 கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன.

போட்டியை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடாக கத்தார் பெருமை பெற்றுள்ளது. 64 போட்டிகளை நடத்த கத்தார் முழுவதும் 8 மைதானங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்த போட்டி 23 ஆவது கால்பந்து போட்டியாகும். முதல் போட்டி கத்தார்- ஈக்வடார் இடையே நடந்தது. இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி இணையதள டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்ற தகவல் வைரலாகி வருகிறது. இந்த மெசேஜுடன் ஒரு லிங்க்கும் உள்ளது. அதை கிளிக் செய்தால் 50 ஜிபி டேட்டா கிடைக்கும் என பரவி வருகிறது.

இந்த தகவல் உண்மையா என்பது குறித்து பேக்ட் செக்கில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போதுதான் இது போலியான செய்தி என தெரியவந்தது. இந்த மெசேஜை நம்பி நிறைய பேர் கிளிக் செய்திருந்தார்கள்.


இது போன்ற செய்திகளை நம்புகிறவர்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற செய்திகளை எந்த நிறுவனமாக இருந்தாலும் அதனை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்களே தவிர இது போன்ற இலவச லிங்க்கை தரமாட்டார்கள்

இந்த லிங்க்கிற்குள் நீங்கள் போனால், இதனை 21 வாட்ஸ்அப் குரூப்புக்கு ஷேர் செய்யுங்கள் என வரும், நீங்களும் நம்பி அதனை ஷேர் செய்வீர்கள். நீங்கள் அனுப்பிய நபரும் ஷேர் செய்வார். இது தொடர்ந்து கொண்டே போகும்

இந்திய அரசின் இணைய பாதுகாப்புக்குழு கூறுகையில், இது போன்ற இணைப்புகளை கிளிக் செய்தால், உங்களது தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. மேலும் இதில் உங்கள் வங்கி விபரங்கள் கேட்கப்பட்டு, அதனை அளித்தீர்கள் என்றால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடு போகும் ஆபத்து உள்ளது. எனவே இந்த மோசடியில் யாரும் சிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது

நன்றாக யோசித்து பாருங்கள். யாராவது 50 ஜிபி டேட்டாவை இலவசமாக கொடுப்பார்களா?

எனவே இந்த லிங்கை யாரும் கிளிக் செய்யாதீர்கள். யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள். போலி செய்தியை நம்பி பணத்தை இழக்காதீர்கள்.

Tags:    

Similar News