தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என, சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-22 08:02 GMT

சென்னை வானிலை ஆய்வு மையம்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் ஜூன் 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

த்மிழக தலைநகர் சென்னையை பொருத்தவரையில், அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வட கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல், ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி இன்று வீசக்கூடும். வட கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த சூறாவளி வீசக்கூடும்.

இம்மாதம் ஜூன் 24,25,26ல் லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கரையோரம், மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடலில் நாளை சூறாவளி வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை மண்டல வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News