தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-01-01 07:42 GMT

பைல் படம்.

தமிழத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காவல்துறையில் 45 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்தர ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஐபிஎஸ் அதிகாரிகள் அருண், கல்பனா நாயக், ஏவி பிரகாஷ், வித்யா ஜெயந்த் குல்கர்னி, பிரவீன் குமார் அபினாபு, நரேந்திரன் நாயர், ரூபேஷ் குமார் மீனா, சத்ய பிரியா, விஜயேந்திர பிதாரி, சி. விஜயகுமார், திஷா மிட்டல், துரை, மகேஷ், அபினவ் குமார், சிபி சக்ரவர்த்தி, ஜியாவுல் ஹக், பி.விஜயகுமார், பகலவன், சாந்தி, விஜயலெட்சுமி, மூர்த்தி, ஜெயச்சந்திரன், மனோகர், தர்மராஜன், சமந்த் ரோகன் ராஜேந்திரா ஆகியோர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவலர் பயிற்சி பள்ளி ஐஜியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி அருண், சிவில் பொருள் குற்ற புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் கண்காணிப்பு ஐஜி கல்பனா நாயக், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு காவலர் பயிற்சி மைய ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகளான அவி பிரகாஷ், வித்யா ஜெயந்த் குல்கர்னி ஆகியோரும் ஏடிஜிபிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் அபினாபு ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி நரேந்திரன் நாயர் ஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை மாநகர ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் டிஐஜி சத்ய பிரியா ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அபினவ்குமார் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை கிழக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News