அமிர்த கலச யாத்திரைக்கு 3 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

‘என் மண் என் தேசம்’ இயக்கத்திற்காக 2000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் 3 அமிர்த கலச யாத்திரை சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Update: 2023-10-29 05:35 GMT

தமிழ்நாடு தலைமை அஞ்சல் மாஸ்டர் ஜெனரல் சாருகேசி, தெற்கு ரயில்வே மூத்த தனி அலுவலர் பிரகாஷ், நேரு யுவ கேந்திரா சங்கத்தின் மாநில இயக்குநர் கே.குன்ஹம்மது, உள்ளிட்டோர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அமிர்த கலச யாத்திரை தன்னார்வலர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், எர்ணாகுளம் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பயணிக்கும் வழித்தடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட கோரிக்கையின்படி என் மண், என் தேசம் இயக்கத்தின் ஒரு பகுதியாக, அமிர்த கலச யாத்திரையின் தன்னார்வலர்களுக்கு வசதியாக, தெற்கு ரயில்வே மொத்தம் மூன்று சிறப்பு ரயில்களை இயக்குகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து புதுதில்லி சப்தர்ஜங் வரையிலும், தாம்பரத்தில் இருந்து டெல்லி சப்தர்ஜங் மற்றும் எர்ணாகுளத்தில் இருந்து புது டெல்லி சப்தர்ஜங்க் வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருவனந்தபுரம் முதல் டெல்லி வரை:

சிறப்பு ரயில் எண். 06079 திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சப்தர்ஜங்கிற்கு தனது பயணத்தைத் தொடங்கியது. 27.10.2023 அன்று திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 13.00 மணிக்கு 229 பங்கேற்பாளர்கள் கலசம் ஏந்தி புறப்பட்டு 28.10.2023 (நேற்று) காலை 10:20 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தனர்.

மொத்தம் 727 பங்கேற்பாளர்கள் இந்த சிறப்பு ரயிலில் டாக்டர்.எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏறி, இன்று மதியம் 13:20 மணிக்கு டெல்லி சஃப்தர்ஜங் நோக்கி ரயில் புறப்பட்டது. அமிர்த கலச யாத்திரை தொண்டர்களுக்கு வசதியாக டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழ்நாடு தலைமை அஞ்சல் மாஸ்டர் ஜெனரல் சாருகேசி,  தெற்கு ரயில்வே மூத்த தனி அலுவலர் பிரகாஷ், நேரு யுவ கேந்திரா சங்கத்தின் மாநில இயக்குநர் கே.குன்ஹம்மது, உள்ளிட்டோர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

எர்ணாகுளம் முதல் டெல்லி வரை:

சிறப்பு ரயில் எண். 06081 எர்ணாகுளத்தில் இருந்து இன்று (28.10.2023) காலை 10.00 மணிக்கு 190 அமிர்த கலசங்களுடன் புறப்பட்டு ஷோரனூர், மங்களூரு மற்றும் வதோதரா வழியாக 30.10.2023 அன்று டெல்லி சப்தர்ஜங் சென்றடையும்.

தாம்பரம் முதல் டெல்லி வரை:

சிறப்பு ரயில் எண்.06085 இன்று (28.10.2023) தாம்பரத்தில் இருந்து 15.00 மணிக்குப் புறப்பட்டு, சென்னை எழும்பூரை அடைந்ததும், 566 அமிர்த கலச யாத்திரை தன்னார்வலர்கள் சிறப்பு ரயிலில் டெல்லி சப்தர்ஜங்கிற்குச் புறப்பட்டனர்.

என் மண், என் தேசம் இயக்கம்

என் மண், என் தேசம் இயக்கம் இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் உச்சக்கட்ட நிகழ்வாகும். நாட்டிற்காக இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கலாசார அமைச்சகத்தினால் இந்த இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரு யுவ கேந்திரா அமைப்பு, அமிர்த கலச யாத்திரை தன்னார்வலர்களுக்கு வசதி செய்வதில் ரயில்வேயுடன் இணைந்து ஒருங்கிணைப்பிணை மேற்கொண்டது.

இந்த நிகழ்வின் போது, நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சேகரிக்கப்பட்ட புனிதமான மண்ணைக் கலப்பதற்காக, நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் குறிக்கும் நினைவுச்சின்னமான கலசம் (கலசம்) வைக்கப்பட்டு, கடமைப் பாதையில் உள்ள அமிர்த வாடிகா (அமிர்தத் தோட்டம் என்று பொருள்) வில் சம்பிரதாயபூர்வமாக வைக்கப்படும்.

தேசிய போர் நினைவுச்சின்னம், புது தில்லிக்கு 'அமிர்த கலச யாத்திரை' எனப் பெயரிடப்பட்ட சிறப்பு ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டு புனித மண்ணை எடுத்துச் செல்லும் பங்கேற்பாளர்கள் புது தில்லியை அடைவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களில் உச்சக்கட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சுமார் 20,000 தன்னார்வலர்கள் தங்கள் வசம் உள்ள மண்ணைக் கொண்ட கலசத்துடன் டெல்லி சென்றடைவார்கள்.

Tags:    

Similar News