தமிழகம் முழுவதும் 27 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்
திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உள்பட தமிழகம் முழுவதும் 27 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாகபணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா, டி.ஐ.ஜி. சரவண சுந்தர் உள்பட 27 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர், அவர்கள் வகிக்கும் பதவி, புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள பணியிடம் பற்றிய விவரம் கீழே தரப்பட்டு உள்ளது.
1) போலீஸ் டி.ஜி.பி.பிரஜ் கிஷோர் ரவி (ஊர்க்காவல் படை) - தமிழக மின் வாரிய துறையின் விஜிலன்ஸ் அதிகாரி.
2) டி.ஜி.பி. வன்னியபெருமாள் (மின்வாரிய விஜிலன்ஸ் அதிகாரி)- சிவில் சப்ளைஸ் பிரிவு போலீஸ் டி.ஜி.பி.
3) டி.ஜி.பி. ராஜீவ் குமார் (காத்திருப்போர் பட்டியல்)- சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபி.
4)கூடுதல் டி.ஜி.பி. பாலநாகதேவி (நிர்வாகம்)- பொருளாதார குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.
5) கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக் (பொருளாதார குற்றங்கள் தடுப்பு பிரிவு - மாநில குற்ற ஆவணங்கள் பிரிவு கூடுதல் டிஜிபி.
6) கூடுதல் டிஜிபி வினித் தேவ் வாங்கடே ( குற்ற ஆவணங்கள் பிரிவு)- நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி சென்னை.
7) ஐ.ஜி. பிரமோத் குமார் (சாலை பாதுகாப்பு பிரிவு)- தமிழ்நாடு காகித ஆலை விஜிலன்ஸ் பிரிவு ஐஜி
8) ஐ.ஜி. காமினி (சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி)- திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர்.
9) ஐ.ஜி. சத்திய பிரியா (திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர்)- சென்னை பொருளாதார குற்றங்கள் தடுப்பு பிரிவு ஐ.ஜி. சென்னை.
10) ஐ.ஜி. ஆசியம்மாள் பொருளாதார குற்றங்கள் தடுப்பு பிரிவு- சென்னை தலைமையக போலீஸ் அலுவலக ஐ.ஜி.
11) ஐ.ஜி லோகநாதன் (சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர்)- மதுரை மாநகர போலீஸ் கமிஷனர்.
12) ஐ.ஜி. நரேந்திரன் நாயர் (மதுரை மாநகர போலீஸ் கமிஷனர்)- மதுரை தெற்கு மண்டல போலீஸ் ஐஜி.
13)ஐ.ஜி. அஷ்ரா கார்க் (தெற்கு மண்டல ஐஜி) - சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் சட்டம் ஒழுங்கு பிரிவு
14) ஐ.ஜி. சந்தோஷ்குமார் (காவல்துறைநவீன படுத்துதல் சென்னை)- ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனர் சென்னை
15 )ஐ.ஜி .பவானீஸ்வரி (ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனர்)- கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி.
16) ஐ.ஜி. சுதாகர் (கோவை மேற்கு மண்டல ஐ.ஜி)- சென்னை பெருநகர காவல் கூடுதல் கமிஷனர் போக்குவரத்து சென்னை.
17) ஐ.ஜி .கபில் குமார் சி சரத்கர் (சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் போக்குவரத்து)- சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலக தலைமையிடத்து ஐஜி.
18)ஜோஷி நிர்மல் குமார் (காத்திருப்போர் பட்டியல்)- சென்னை போலீஸ் அகாடமி கூடுதல் இயக்குனர்.
19) ஐ.ஜி. ஜெயகவுரி (போலீஸ் அகாடமி இயக்குனர்)- சென்னை ஆயுதப படை போலீஸ் ஐஜி.
20) டி.ஐ.ஜி. கயல்விழி சென்னை கடலோர பாதுகாப்பு படை)- சென்னை பெரு நகர காவல் இணை இயக்குனர்
21)- டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி (சென்னை பெருநகர காவல் இணை இயக்குனர்- சென்னை பெருநகர காவல் ஆணையரக வடக்கு மண்டல இணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு).
22) டி.ஐ.ஜி. ரம்யா பாரதி (சென்னை பெருநகர காவல் வடக்கு மண்டல இணை ஆணையர்)- மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி.
23)- டி.ஐ.ஜி. பொன்னி (மதுரை சரக போலீஸ் டிஐஜி)- காஞ்சிபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.
24)- டி.ஐ.ஜி. பகலவன் (காஞ்சிபுரம் சரக போலீஸ் டிஐஜி)- திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.
25) டி.ஐ.ஜி. சரவண சுந்தர் (திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி)- கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.
26) டி.ஐ.ஜி. அபிஷேக் தீட்சித் (சென்னை தலைமைய போலீஸ் டி.ஐ.ஜி)- சென்னை மாநகர போலீஸ் போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையர்
27)- டி.ஐ.ஜி. ராஜேந்திரன் (திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர்) - மாநில நுண்ணறிவு பிரிவு டி.ஐ.ஜி. சென்னை.
இதற்கான உத்தரவினை தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்து உள்ளார்.