இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், இன்று முதல் 24 மணி நேரமும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்;

facebooktwitter-grey
Update: 2021-08-23 02:00 GMT
இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி
  • whatsapp icon

தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசியை விரைவாக செலுத்தும் வகையில், தமிழக அரசு முகாம்களை நடத்தி வருகிறது. தடுப்பூசி உற்பத்தி குறைவாக இருப்பதால், மத்திய அரசு, மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

அதன்படி, இன்று முதல் தமிழகத்தின் அனைத்து  மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில்,  24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி துவங்குகிறது.

Tags:    

Similar News