234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

Update: 2021-01-26 06:01 GMT

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு 

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதனை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு புதிய வாக்காளர்களுக்கு டிஜிட்டல் வாக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News