தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும்

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்து உள்ளது.;

Update: 2022-04-17 10:41 GMT

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் வகையில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும், நாளையும் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பின் படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல்,கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழையும், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும்.

Tags:    

Similar News