நகராட்சி தலைவர்கள், ஆணையர்களின் பயன்பாட்டிற்கு 187 புதிய வாகனங்கள்

New Vehicle - நகராட்சி தலைவர்கள், ஆணையர்களின் பயன்பாட்டிற்கு 187 புதிய வாகனங்களை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2022-08-01 09:23 GMT

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சிகளின் பயன்பாட்டிற்காக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 187 புதிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

New Vehicle - தமிழகத்தில் உள்ள நகராட்சி தலைவர்கள் மற்றும் பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை தலைமை செயலத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.23கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 187 வாகனங்களை வழங்கினார்.

மொத்தம் உள்ள 138நகராட்சிகளில் முதல் கட்டமாக 100 நகராட்சிகளின் தலைவர்கள் பயன்பாட்டிற்காக 91ஸ்கார்பியோ கார்களும், ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலக பயன்பாட்டிற்காக 96 பொலிரோ வாகனங்களும் என மொத்தம் 187 வாகனங்களை முதல் அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகதுறை இயக்குனர் பொன்னையா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News