16 மாவட்டங்களில் சதமடித்த வெயில்: அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி பதிவு

வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக ஈரோடு மற்றும் மதுரை விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.;

Update: 2023-04-20 15:30 GMT

பைல் படம்.

இன்றைய வானிலை நிலவரப்படி தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் 16 இடங்களில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மற்றும் மதுரை விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தும் என்பதும், பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருக்கும் என்பது வழக்கம். அந்தவகையில்,பஞ்சாப் ஹரியானா மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பீகார், ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடும் வெயிலால் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள், நடை வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து வேலை நேரத்தை மாற்றி அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது.

இன்றைய வானிலை நிலவரப்படி தமிழ்நாட்டில் 16 இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மற்றும் மதுரை விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

சென்னை (மீனம்பாக்கம்) 39.7 -103.46

சென்னை (நுங்கம்பாக்கம்) 38.1 -100.58

தர்மபுரி 38.5 -101.3

கடலூர் 38.4 -101.12

ஈரோடு 41.0 -105.8

கரூர் பரமத்தி 40.5 -104.9

மதுரை நகரம் 39.8 -103.64

மதுரை (விமான நிலையம்) 40.8 -105.44

நாகப்பட்டினம் 38.4 -101.12

சேலம் 39.5 -103.1

தஞ்சாவூர் 39.0 -102.2

திருச்சி 40.3 -104.54

திருப்பத்தூர் 38.8 -101.84

திருத்தணி 39.6-103.28

வேலூர் 40.4 -104.72

பாளையங்கோட்டை 38.7 -101.66

மேலும் புதுச்சேரியில் முதல் முறையாக இன்று 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News