இலங்கை தமிழர்கள் மேலும் 15 பேர் தமிழகம் வருகை
கடும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 15 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.;
இலங்கையில் பணவீக்கம், கையிருப்புக் குறைவு, அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத பொருளாதார ஏற்பட்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களான மருந்துகள், பால், மாவு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு தனுஷ்கோடியை அடைகின்றனர்.
இலங்கையில் இருந்து பைபர் படகில் மேலும் 3 சிறுவர்கள் உட்பட 15 பேர் தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கோவில் பகுதிக்கு வந்துள்ளனர்.
இதுவரை இலங்கையில் இருந்து 50ற்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் வந்துள்ளனர்