1.38 மில்லியன் மீன் குஞ்சுகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் 1.38 மில்லியன் வரி இறால் மீன் குஞ்சுகள் மன்னார் வளைகுடா பகுதியில் விடப்பட்டது

Update: 2022-02-17 15:30 GMT

மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பாக மீன் வளத்தை பெருக்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் 1.38 மில்லியன் வரி இறால் மீன் குஞ்சுகள் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியில் கடலில் விடப்பட்டன.


மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் இறால் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து கடலில் விட்டு இறால் வளத்தை பெருக்கும் முயற்சியில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டு வருகிறது. 'பிரதமரின் மத்ஸ்ய சம்பத யோஜனா' திட்டத்தின் கீழ் இதற்காக ரூ. 168.948 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் 200 மில்லியன் இறால் குஞ்சுகளை விடுவதே இந்த திட்டத்தின் நோக்கம். கடந்த 2017 – 2021 வரையிலான காலக்கட்டத்தில் 17.245 மில்லியன் வரி இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் தமிழ்மணி, மூத்த ஆராய்ச்சியாளார் ஜான்சன், கடல் மீன் ஆராய்ச்சியாளர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் கலந்து கொண்டனர். இத்தகவல் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News