தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-09 03:33 GMT

பைல் படம்.

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக தரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளராக சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதோடு, வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக கலையரசி நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி நியமிக்கப்பட்டுள்ளார்.உள்துறை சிறப்பு செயலாளராக சுகந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குனராக சந்திரகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக நலத்துறை ஆணையராக அமுதவள்ளி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குனராக உமாஷங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் செயலாளராக மகேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை துணை இயக்குனராக சிம்ரன்ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்துறை துணை செயலாளராக பத்மஜா-வை நியமித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News