அரசுக்கு 10,000 கோடி இழப்பு ஏற்படும் : எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கம் தகவல்
எம் சாண்டு ஜல்லி முறைகேடாக செல்வதால் அரசுக்கு 10,000 கோடி இழப்பு ஏற்படும் : எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கம் தகவல்.;
சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பிற்கு தரமற்ற எம்சாண்ட் மணல் காரணம் எனவும், தமிழகத்தில் 4,000 கிரஷர்கள் அனுமதியின்றி இயங்குவதாகவும், மவுலிவாக்கம் போன்ற ஒரு நிகழ்வு இனி தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க அனுமதி இன்றி இயங்கும் கிரஷ்ர்களை மூட வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று குடியிருப்பு நிகழ்வுகள் குறித்தும் அதற்குப் பயன்படுத்திய m-சாண்ட் குறித்தும் தெரிவிக்க தமிழ்நாடு M-sand லாரி உரிமையாளர் நலசங்க தலைவர் யுவராஜ் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த ஒரு வார காலமாக கட்டுமானங்கள் குறித்து பல்வேறு விம்சனங்கள் எழுந்து வரும் நிலையில் குறிப்பாக சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரிய குடிருப்பில் ஏற்பட்ட பாதிப்பு என தெரிவித்த அவர்.
இதற்கு முக்கியமான காரணம் தரமற்ற m-sand என நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆற்று மணல் கிடைக்காத இந்த சமயத்தில் அரசு m-sand தமிழகத்தில் கட்டுமான பணிகளை செய்யலாம் என பரிந்துரைத்தது. அதன்படி தமிழகத்தில் கட்டுமான பணிகள் அனைத்தும் M-சாண்டு பயன்படுத்தி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அவர் கூறினார்.
அரசு பரிந்துரைக்கும் m-சாண்டுக்கு இதுநாள் வரையில் 353 கிரஷர்கள் மட்டுமே முறையான அனுமதி பெற்று இயங்கி வருகிறது எனவும், அரசு அனுமதின்றி 4000 கிரஷர்கள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதற்கு காரணம் முந்தைய ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் பெரும்பாலான அமைச்சர்களின் துணையுடன் தான் இயங்கியது என அவர் குற்றஞ்சாட்டினார்.
தமிழக முதல்வருக்கு கனிம வளம் மூலம் வரும் ஐந்தாண்டுகளில் ரூபாய் 250 கோடி கிடைக்கும் என்ற தவறான தகவல் ஊழல் அதிகாரிகளால் தரப்பட்டுள்ளது இதன்காரணமாக மலைகள் உடைக்கப்பட்டு m-சாண்டு ஜல்லி முறைகேடாக செல்வதால் அரசுக்கு 10,000 கோடி இழப்பு ஏற்படுவதாக அவர் கூறினார். அனுமதி இன்றி இயங்கும் கிரஷர்களில் வழங்கப்படும் M-சாண்டு தரம் மற்றும் அளவை பரிசோதிக்க அரசின் மூலம் அதிகாரிகள் இதுவரையில் நியமிக்கபடவில்லை என அவர் தெரிவித்தார்.
ஆகவே சென்னையில் இதற்கு முன் நடந்த மௌலிவாக்கம் பேரழிவினை போன்று தமிழகத்தில் இனி நிகழாமல் இருக்க அரசின் அனுமதி இன்றி இயங்கும் 4000 கிரஷர்களையும் இழுத்து மூடி சீல் வைக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். அதபோல் அனுமதி இன்றி இயங்கும் கிரஷர்களிலிருந்து பிற மாநிலங்களுக்கும் m-சாண்ட் கடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க ஆந்திரா கர்நாடகாவில் online ல் கனிமங்கள் வழங்குவது போன்று தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தினால் கனிமங்கள் ஏற்றும் லாரி அளவு தரம் செல்லும் இடம் என அனைத்து விவரங்களும் பதிவாகிவிடும் என அவர் தெரிவித்தார். எனவே தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி நேரடியாக கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.