1000 கோடி மதிப்புள்ள பங்கு பத்திரங்கள் ஏலத்தில் விற்பனை -தமிழக அரசு அறிவிப்பு

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள கோட்டை அலுவலகத்தில் செப்டம்பர் 21 அன்று நடத்தப்படும்.;

Update: 2021-09-16 17:08 GMT

தமிழ்நாடு அரசு ரூபாய் 1000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள - கோட்டை அலுவலகத்தில் செப்டம்பர் 21, 2021 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System) மின்ன ணு படிவத்தில் (Electronic format) செப்டம்பர் 21, 2021 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Tags:    

Similar News