தமிழகஅரசின் 1000 கோடி மதிப்புள்ள பங்குகள் ஏலமுறையில் விற்பனை

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள கோட்டை அலுவலகத்தில் டிசம்பர் 14, 2021 அன்று நடத்தப்படும்

Update: 2021-12-09 17:37 GMT

தமிழ்நாடு அரசு ரூபாய் 1000.00 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள கோட்டை அலுவலகத்தில் டிசம்பர் 14, 2021 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System) மின்ன ணு படிவத்தில் (Electronic format) டிசம்பர் 14, 2021 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

Tags:    

Similar News