100 % இருக்கைகளுடன் திரையிட அனுமதி வழங்கியதற்கு நன்றி : நடிகை குஷ்பு
விஜய்யை 'மாஸ்டர்' படத்தை விசிலடித்து, வெடிவெடித்துக் காணக் காத்திருக்கிறேன், ஈஸ்வரனில் சிலம்பரசனை பார்க்கவும் காத்திருக்கிறேன் –குஷ்பு;
நடிகையும், பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் கமெண்ட்டில், "தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் திரையிட அனுமதி வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் மிக்க நன்றி. அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கும் துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும். பொழுதுபோக்கை மீண்டும் தரும். பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்களுக்கு ஒரு அறிவுரை, திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை. எனெனில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு. அச்சம் இருந்தால் தியேட்டர்களுக்கு வராதீர்கள். உங்கள் அச்சத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் தியேட்டருக்கு நிச்சயம் வந்தே தீர வேண்டும் என்று யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் நடிகர் விஜய்யை 'மாஸ்டர்' படத்தை விசிலடித்து, வெடிவெடித்துக் காணக் காத்திருக்கிறேன். ஈஸ்வரனில் சிலம்பரசனை பார்க்கவும் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.