100% இருக்கை – பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு செயல்படுவோம் : இயக்குநர் பாரதிராஜா
100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியதற்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கதின் தலைவர் பாரதிராஜா நன்றி கூறியுள்ளார்.;
100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது, இதற்க்கு நன்றி தெரிவித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கதின் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட இந்த பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.
100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் போது, திரையரங்குகளும், பார்வையாளர்களும், தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் (SoP's) கருத்தில் கொண்டு செயல்படவும் வேண்டுகிறோம். திரைப்படம் பார்க்க வரும் அனைவரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, இந்த பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறு கொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
இவ்வாறு அவரது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.