கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வருகிறது 1 லட்சம் கன அடி நீர்

கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட 1 லட்சம் கன அடி காவிரி நீர் மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

Update: 2022-07-11 08:28 GMT

காவிரி நீர் பைல் படம்.

தமிழர்களின் ஜீவாதார நதியாக காவிரி ஆறு விளங்கி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகி ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைந்து தமிழகத்தில் 11 மாவட்டங்களின் பாசன தேவையையும் இதர மாவட்டங்களில் குடிநீர் தேவையையும் காவிரி ஆறு தீர்ந்து வைக்கிறது.

இத்தகைய சிறப்புக்குரிய காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியான கர்நாடக மாநிலத்தின் கபினி அணை பகுதி மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபிணி அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதன் காரணமாக உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

கே. ஆர். எஸ். எனப்படும் கபிணி அணையில் இருந்து வினாடிக்கு 74 ஆயிரம் கன அடி தண்ணீரும், கபிணி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் கன அடி காவிரி நீர் மேட்டூர் அணையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு மாநில எல்லையான பிலிகுண்டுவை கடக்கும் காவிரி நீர் நாளை இரவிற்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என பொதுப்பணித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News