இவரு பெரிய லாடு லபக்கு தாசு..இது தெரியாம போச்சே...
Lord Labough Dash-இவரு பெரிய லாடு லபக்கு தாசு..இது தெரியாம போச்சே...;
Lord Labough Dash-இவரு பெரிய லாடு லபக்கு தாசு'னு ஒரு கேலி சொல்லாடல் இருக்கு! இதுல வரும் லாடு லபக்குன்றவர் சென்னையில் வாழ்ந்த மேதாவி 'Lord Labough Dash' தெரியுமோ?
யார் இந்த "லாடு லபக்கு தாஸ்" தெரியுமா..? அம்மாடியோவ் இது தெரியாம தான் அத்தனை பேரையும் கிண்டல் அடித்தேனா ?
சரி வாங்க கதைக்ககுள் போகலாம்.. அந்த லாடு ஹஸ்ட்ரி இது கீது சாரே..
அப்போதைய சென்னை மாகாணம் அடுத்து மெட்ராசு தற்போது சென்னை சொல்றாய்ங்க..
இந்த சென்னையை பற்றி பேசினாலே அதன் ஹிஸ்டிரி இருக்குல்ல அதுல ஏராளமான பாரம்பரிய முறைகள், கலந்துரையாடல் மன்றங்கள், புகைப்படங்கள் மற்றும் கலைக் குழுக்கள், வரலாற்று சின்னங்கள், வாழ்க்கை முறை, சிறப்பான பல கட்டிடங்கள் என சொல்லிக்கினு போய்க்கினே இருக்கலாம்.
அந்த வகையில் மிக சீரியஸாக பார்க்க வேண்டிய விஷயத்தை கூட சில சமயத்தில் நக்கல் நையாண்டியா பேசுராய்ங்க. எக்ஸ்சாம்பிளுக்கு இவர் என்ன பெரிய லாடு லபக்கு தாஸ் அப்படிம்பாய்ங்க..
"லபக் தாஸ்" பிரபுவின் படத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். நகைச்சுவை நடிகர் விவேக் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாச்சுங்கோ.
அது கோசரம் இன்னான்னா லபக் தாஸ் உண்மையில் நம்ம நாட்டு சுதந்திரத்திற்கு முன்னாடி காலத்திலயே மெட்ராஸின் ஆளுநர் தான் லார்ட் லபக் தாஷ் அறியுமோ?. இவர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருந்த குஜராத்தி வணிகர்கள், கோவிந்தோஸ் கிரிதர்தாஸ் & கோ நிறுவனத்தின் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த லாட் கிருஷ்ணதாஸ் பால முகுந்த் தாஸ் என்பவரே ஆவார்.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த ஒரு சுவாரஸ்யமான காரணம் இதற்கு உண்டு. அதாவது ஜார்ஜ் டவுனில் உள்ள அனைவருக்கும் இலவசமாக லட்டு விநியோகித்ததால் அவர்களுக்கு இந்த பெயர் வந்துச்சாம்.
அது மட்டுமில்ல ஜெனரல் பீட்டர்ஸ் சாலையின் எல்லைக்குட்பட்ட ஒரு பரந்த பகுதியை லாடு குடும்பம் வைத்திருந்தனர். இது பீட்டர்ஸ் கார்டன்ஸ் அப்படிக்கா அழைக்கப்பட்டது. அந்த பிளேஸ்ல தான் ராஜா ரவி வர்மா, மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர் மற்றும் மியூசிக் அகாடமியின் 1937 ஆண்டு மாநாட்டில் விருந்து அளித்து இருந்தாராம். இன்னிக்கும் அங்கே லாடு குடம்பத்தினர் சிலர் அங்கு வாழ்கின்றனராம்.
லாட் கோவிண்டோவுக்கு ஒரு நினைவுச்சின்னமும் உள்ளதாம். அம்மாம் பெரிய தோட்டத்துல ஒரு பகுதி இப்போது "பார்டர்" தோட்டம் என்று அழைக்கப்படுகிறதாம்.. எல் ஜி என் சாலை, கோபால் தாஸ் சாலை ஆகியவை அவுக குடும்ப மெம்பர்களை நினைவுகூர்கின்றதாம்..அதெல்லாம் விட பெரிய சங்கதி இன்னான்னா நம்ம காங்கிரஸ் கட்சி கீதுல்ல மெட்ராஸ்ல அவுக இல்லமான சத்தியமூர்த்தி பவன் லாட் கோவிந்தோஸ் பரிசளித்த நிலமாம்..(இது தெரியாம போச்சே)
சரி விடுங்க மேட்டருக்கு வருவோம் ... இப்படிப்பட்ட சிறப்பு பண்புகளை கொண்டிருந்த லார்ட் லபக்கு தாஸ் பற்றி நாம் சரிவர தெரியாமல் இன்றளவும் நாம் நக்கலும் நையாண்டியுமாக பேசி வருவதை காட்டிலும், வரலாற்று உண்மைகளை தெரிந்துகொண்டு அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கலாம்.
அப்படிப்பட்ட லாடு லபக்கு தாஸ் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2