தமிழகம் முழுவதும் 9, 11ம் வகுப்புகள் ஆரம்பம்

Update: 2021-02-08 05:14 GMT

தமிழகம் முழுவதும் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளன. இதனால் காலையிலேயே மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். அதிக மாணவர்களை கொண்ட வகுப்புகள் ஷிப்டு முறையில் நடத்தவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களும் பெற்றோரிடம் ஒப்புதலுக்கான அனுமதிக் கடிதம் கட்டாயம் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News