மாஸ்க் - தனிநபர் இடைவெளி - 10 நாட்களில் 10 லட்சம் வழக்குகள்.
திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்...;
தமிழகத்தில் முகக்கவசம் அணியாததற்காக கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் இதுவரை சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளது.தனிநபர் இடைவெளி பின்பற்றாததற்காக சுமார் 37ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முழு ஊரடங்கிலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் தனிநபர் இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது வழக்கு பதிவு மேற்கொண்டதில் 10 நாட்களில் 10 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதாம்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மாஸ்க் அணியாமலும் தனிமனித இடைவெளி இல்லாமலும் சுற்றியதாக காவல் துறையினர் தொடர்ந்து வழக்கு பதிந்து, அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மாஸ்க் அணியாத வழக்கு 10 லட்சமும், தனிநபர் இடைவெளி பின்பற்றாததற்காக சுமார் 37ஆயிரம் (36649) வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.