சசிகலா 7ம் தேதி தமிழகம் வருகிறார் - டி.டி.வி தினகரன்
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக இருந்து வழி நடத்துவார் - தினகரன்.
பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 27ம் தேதி விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் இருந்து 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் சசிகலா 7ம் தேதி தமிழகம் வருகிறார் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் சசிகலாவிற்கு ஓசூர் எல்லையிலிருந்து சென்னை வரை வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக இருந்து வழி நடத்துவார் என்று தினகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.