தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத்தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா அறிவித்துள்ளார்.
புது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா, தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். தமிழகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கும்.வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 19 கடைசி நாள்.வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20-ம் தேதி நடைபெறும்.
வேட்பு மனுவை திரும்பப் பெற மார்ச் 22 கடைசி நாள் என்றும் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்தார். மேலும் தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.