10 நாட்களில் 6 லட்சம் கோரிக்கை மனுக்கள் வாங்கிய ஸ்டாலின்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியின் மூலமாக பத்து நாட்களில் 6 லட்சம் கோரிக்கை மனுக்களை மக்கள் அளித்தனர்.;

Update: 2021-02-06 05:02 GMT

கடந்த மாதம் 29ம் தேதி திருவண்ணாமலையில் தொடங்கிய உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் இதுவரை நேரடியாக சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களும், இணையதளம் மற்றும் ஸ்டாலின் அணி செயலி மூலமாக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் குறைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செலுத்தியுள்ளனர். மக்களின் கோரிக்கைகளை தீர்க்கவே தனது ஆட்சியின் முதல் நூறு நாட்கள் ஒதுக்கப்படும் என்று திரு.மு.க.ஸ்டாலின் மக்களின் தனிப்பட்ட உறுதியை அளித்துள்ளார். மேலும் இந்த மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் மக்களை நேரடியாகவும் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடி வருகிறார்.

Tags:    

Similar News