ஊக்கத்தொகையும் வேண்டாம் பாராட்டுதலும் வேண்டாம் - காவலர்களின் குமுறல்.
வீட்டில் இருப்பவர்களுக்கும் ரோட்டில் பணியில் இருப்பவர்களுக்கும் ஒரே நீ(நி)தியா?;
மற்ற அரசாங்கப் பணிகளை போல நாங்களும் 50 விழுக்காடு பணி செய்ய அனுமதிக்க வேண்டும் இல்லையேல் சொந்த விடுப்பில் செல்ல அனுமதிக்க வேண்டும் என காவலர்கள் குரல் ஓங்கி ஒலி்த்து வருகிறது.
வேலையே செய்யாமல் வீட்டிலிருந்து முழு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கும் அதே நிலைதான் 24 மணி நேரமும் ரோட்டில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கும் அதே நிலைதான் என்ன அநியாயம்... கொந்தளித்து போய் உள்ளனர் தமிழக காவல்துறையினர்.
அரசு தற்போது அறிவித்த ஈட்டிய விடுப்பு அடுத்த ஒரு வருடத்திற்கு வழங்க முடியாது என்ற அறிவிப்பு அரசுத் துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் காவல் துறையினர் மத்தியில் பெரிய வருத்தத்தையும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமெனில் அரசுத் துறையினர் அனைவரும் 50 விழுக்காடு எண்ணிக்கையில் வேலை செய்கின்றனர் உடல்நிலை சரியில்லாதவர்கள் கணக்கில்லாமல் விடுப்பில் உள்ளனர் மற்றும் ஆசிரியர்கள் 2020 ஆம் வருடம் முழுவதும் வீட்டில் இருந்தனர் 2021 ஆம் வருடமும் அதே நிலைமை தொடர்கிறது ஆனால் அவர்களுக்கும் முழு சம்பளம் மற்ற அனைத்து சலுகைகளும் தவறாமல் கிடைக்கிறது.
ஆனால் காலை முதல் மாலை வரை ஊர் அடங்கை அமல்படுத்த வெயிலிலும் மழையிலும் ரோட்டில் நின்று கொண்டிருக்கும் காவலர்களுக்கும் அதை நிலைதான் இதை விட என்ன பெரிய கொடுமை என்றால் முறையாக கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு கிடைக்காமல் நிறைய காவலர்கள் தவிப்பில் உள்ளனர்.
ரோட்டிலே பணியை செய்து கொண்டிருப்பதினால் தங்களது ஊதிய உயர்வை கூட கேட்டுப் பெறும் நிலையில் உள்ளனர் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டிய அமைச்சு பணியாளர்கள் கணக்கே இல்லாமல் விடுப்பில் உள்ளனர். ஆனால் சாலையில் தினம் செத்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர் எந்த ஒரு ஊதிய உயர்வு போன்ற அடிப்படை பிரச்சினைகளையும் அவர்களிடம் போய் கெஞ்சி லஞ்சம் கொடுத்து பெறவேண்டியுள்ளது.
குறிப்பாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் நிலைமை இன்னும் மோசம் எந்த ஒரு அரசாங்க பிரதி பலன்களும் இவர்களுக்கு முறையாக கிடைப்பது கிடையாது லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது. இதை கேட்பதற்கு அதிகாரிகளுக்கும் தைரியம் கிடையாது என வருத்தத்தில் உள்ளனர்.
ஆகவே அவர்கள் ரோட்டில் தினம் செத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கும் அதே பலன்கள் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் அதே பலன்கள் என்ன அற்புதம் என மன வேதனையில் உள்ளனர்.
தமிழகத்தில் அயராது பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் மருத்துவ உதவியாளர்கள் என அனைவருக்கும் அரசு சமீபத்தில் ஊக்கத்தொகை அளித்தது இது பாராட்டக்கூடிய விஷயம் ஆனால் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. காவல்துறையினருக்கு ஒரு பாராட்டுதல் கூட அறிவிக்கவில்லை என்ற மனவேதனையில் உள்ளனர்.
ஊக்கத்தொகையும் வேண்டாம் பாராட்டுதலும் வேண்டாம் மற்ற அரசாங்கப் பணிகளை போல நாங்களும் 50 விழுக்காடு பணி செய்ய அனுமதிக்க வேண்டும் இல்லையேல் சொந்த விடுப்பில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற குரல் காவலர்கள் மத்தியில் ஓங்கி வருகிறது.