தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் கனமழை பெய்யும். ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர்தான் இருக்கும். ஆனால், இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில தினங்கள் சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 11 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.