கோவில்பட்டிக்கு நாளை 5 அமைச்சர்கள் வருகை

Update: 2020-12-28 10:45 GMT

ஐந்து மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் விழா நாளை கோவில்பட்டியில் நடக்கிறது. இதில் 5 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் தனியார் கல்லூரியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நாளை (29 ம் தேதி) நடைபெறும் விழாவில் பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்குகிறார்.விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் எம்எல்ஏ.,கள் எஸ்.பி. சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

Tags:    

Similar News