சென்னைக்கு கடத்தப்பட்ட 4 ட்ரோன்கள் பறிமுதல் 2 பேர் கைது

Update: 2020-12-30 04:59 GMT

துபாயில் இருந்து சென்னைக்கு முறையான அனுமதி இல்லாமல் விமானத்தில் கடத்தி வந்த 4 ட்ரோன்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு இது தொடர்பாக சென்னையை சோ்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

துபாயில் இருந்து சிறப்பு விமானம் சென்னை வந்தது.அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினா் சோதணையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த கருப்பசாமி(65),சசிகுமாா்(31) ஆகிய இருவா் மீது சந்தேகம் ஏற்பட்டது.இருவரையும் நிறுத்தி சோதனையிட்டனா்.அவா்களுடைய சூட்கேஸ்களில் 4 ட்ரோன்கள்,அதற்கு உபயோகிக்கும் பேட்டரிகள் மற்றும் உதிரிப்பாகங்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.ட்ரோன்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எடுத்துவருவதற்கு முறையான அனுமதி பெறவேண்டும்.ஆனால் அவா்கள் அதைப்போல் அனுமதி பெறவில்லை.

இதையடுத்து ரூ.6.17 லட்சம் மதிப்புடைய ட்ரோன்கள்,பேட்டரிகளை பறிமுதல் செய்தனா்.அதோடு இருவரையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.இதையடுத்து துபாயிலிருந்து சென்னை வந்த மற்றொரு சிறப்பு விமான பயணிகளை சோதனையிட்டனா்.அப்போது ராமநாதபுரம்,மன்னார்குடியை சோ்ந்த 2 பயணிகளை சோதனையிட்டனா்.அவா்கள் உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த சுமார் 807 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.அதன் மதிப்பு ரூ.41.63 லட்சம் என கூறப்படுகிறது.இதையடுத்து இவா்களையும் கைதுசெய்தனா்.சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 துபாய் விமானங்களில் நடந்த சோதணைகளில் ரூ.47.8 லட்சம் மதிப்புடைய ட்ரோன்கள்,தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு 4 பயணிகள் கைது செய்யப்பட்டனா்.

Tags:    

Similar News