தமிழகத்தின் 38வது மாவட்டமாக உதயமாகிறது மயிலாடுதுறை

Update: 2020-12-27 06:03 GMT

தமிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாளை (28/12/2020) உதயமாகிறது.

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மாவட்டத்திற்கான எல்லை கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (28 ம் தேதி) காலை 09.30 மணிக்கு காணொளி மூலம் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

Tags:    

Similar News