ஜன. 31 ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Update: 2021-01-28 08:07 GMT

தமிழகம் முழுவதும் வருகிற 31 ம் தேதி 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஜன 31 ம் தேதி 43 ஆயிரத்து 51 மையங்களில் 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News